தடுப்பூசி போடாமல் கனடாவிற்குள் நுழைய இவர்களுக்கு மட்டும் அனுமதி! வெளியான முக்கிய அறிவிப்பு
தடுப்பூசி போடப்படாத கனேடிய டிரக் ஓட்டுநர்கள் அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கனடா எல்லை சேவைகள் ஏஜென்சி (CBSA) அறிவித்துள்ளது.
ட்ரூடோவின் லிபரல் அரசாங்கம், கொரோனாவுக்கு எதிரான அதன் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் இருந்து நுழையும் அனைத்து டிரக் ஓட்டுநர்களும் சனிக்கிழமை முதல் தடுப்பூசி போட்டதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று அறிவித்தது.
டிரக் ஓட்டுநர்களுக்கான கட்டாய தடுப்பூசி ஆணையை கைவிடுமாறு பிரதான எதிர்க்கட்சி மற்றும் டிரக் உரிமையாளர் சங்கங்கள்,ட்ரூடோவுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இது ஓட்டுநர் பற்றாக்குறை, வர்த்தகத்தை சீர்குலைக்கும் மற்றும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறினார்.
இந்நிலையில், அனைத்து டிரக் ஓட்டுநர்களும் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும் என்ற முடிவை மாற்றியமைப்பதாக CBSA புதன்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து கனடா வரும் தடுப்பூசி போடப்படாத, அல்லது ஒரு டோஸ் தடுப்பூசி போட்ட கனேடிய டிரக் ஓட்டுநர்களுக்கு, கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று CBSA தெரிவித்துள்ளது.
இருப்பினும், அமெரிக்கா டிரக் ஓட்டுநர்கள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், இல்லையெனில் ஜனவரி 15 முதல் எல்லையில் இருந்து திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று CBSA செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.