கனடாவின் பிரிட்ஜிங் ஓபன் ஒர்க் பெர்மிட் திட்டத்தில் மாற்றம்! இனி எளிதாக விண்ணப்பிக்கலாம்
கனடாவில் குடிவரவு விண்ணப்பதாரர்கள் அவர்களின் பணி அனுமதி (work permit) காலாவதியாக 4 மாதங்கள் இருக்கும் போது BOWP-க்கு விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
அவர்களின் பணி அனுமதி காலாவதியானாலும் அவர்கள் BOWP-க்கு தகுதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சமீபத்தில் பிரிட்ஜிங் ஓப்பன் ஒர்க் பெர்மிட் (Bridging Open Work Permit) திட்டத்தில் மாற்றங்களை அறிவித்தது, அதனால் அது இன்னும் எளிதாக அணுகக்கூடியதாக இருக்கிறது.
கனேடிய நிரந்தர வதிவிடத்திற்கு விண்ணப்பித்த தகுதியுள்ள பணி அனுமதி வைத்திருப்பவர்களுக்கு BOWPs திறக்கப்பட்டுள்ளது.
கனடாவின் IRCC அவர்களின் நிரந்தர வதிவிட விண்ணப்பத்தில் முடிவெடுக்கும் வரை இந்த தொழிலாளர்கள் கனடாவில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்பதே BOWP-ன் கருத்து.
செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட மாற்றங்களின்படி, நீங்கள் BOWP-க்கு எப்போது விண்ணப்பிக்கலாம் என்பதற்கு இனி வரம்பு இல்லை. முன்னதாக, உங்களின் பணி அனுமதியின் காலாவதி தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதேபோல் பழைய விதிகளின்படி, உங்களின் பணி அனுமதி காலாவதியாகிவிட்டால், BOWP-க்கு விண்ணப்பிக்க உங்களுக்குத் தகுதி இல்லை.
ஆனால் இப்போது அவர்களின் பணி அனுமதி காலாவதியானாலும் அவர்கள் BOWP-க்கு தகுதி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உங்கள் ஒர்க் பெர்மிட் நிலை (status) காலாவதியாகி, நீங்கள் மீட்டமைக்க தகுதியுடையவராக இருந்தாலோ அல்லது கனடாவில் "பராமரிக்கப்பட்ட நிலையில்" (maintained status) இருந்தாலோ நீங்கள் இப்போது தகுதி பெறலாம்.
இவை அனைத்திற்கும் மேல் கூடுதலாக, BOWP பின்வரும் வகையான விண்ணப்பதாரர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது:
- மாகாண நாமினி திட்டம் (PNP/Provincial Nominee Program) விண்ணப்பதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு தடையற்றது என்பதைக் குறிக்கும் நியமனக் கடிதத்தின் நகல் மற்றும் அவர்களது விண்ணப்பப் படிவத்தில் "ஓப்பன் ஒர்க் பெர்மிட்" என்பதைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அக்ரி-ஃபுட் பைலட் (Agri-Food Pilot) விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஓன்லைனில் சமர்ப்பித்து, தங்கள் விண்ணப்பத்துடன் கொள்கை கடிதத்தில் “வாடிக்கையாளர் தகவல்” (Client Information) எனும் புலத்தில் ஒப்புதல் அளித்தால், அவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- கியூபெக் திறமையான தொழிலாளர்கள் (Quebec skilled workers) அவரகளது கோப்பு முழுமை சோதனை செய்யப்பட்டதற்கு பிறகு, BOWP-க்கு விண்ணப்பிக்க தகுதி பெறுகின்றனர்.
கியூபெக் திறமையான தொழிலாளர்கள் மற்றும் PNP விண்ணப்பதாரர்களுக்கான BOWP 24 மாதங்கள் அல்லது அவர்களது பாஸ்போர்ட்கள் காலாவதியாகும் வரை, எது முதலில் வந்தாலும் அது செல்லுபடியாகும். இந்த விண்ணப்பதாரர்கள் கனடாவில் செயலாக்கக் காலம் வரை காத்திருக்க போதுமான நேரம் இருப்பதை உறுதிசெய்வதாகும்.
பிற குடியேற்ற வகைகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் BOWP-கள் 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
BOWP வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் தானாகவே BOWP பெற மாட்டார்கள். ஒருவரது கணவனோ, மனைவியோ கனடாவில் பணிபுரிய விரும்பினால், திறமையான தொழிலாளியின் துணைவராகவோ அல்லது முழுநேர மாணவரின் துணைவராகவோ, எது பொருந்துகிறதோ, அதை அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
படிப்பு அனுமதி பெற்றவர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் முதுகலை பட்டப்படிப்பு பணி அனுமதிப்பத்திரத்திற்கு (PGWP) தகுதி பெற்றிருந்தால், spousal open work permit-க்கு விண்ணப்பிக்கலாம்.
பிரிட்ஜிங் ஓபன் ஒர்க் பெர்மிட் (BOWP) என்பது ஒரு தொழிலாளி, அவருடைய நிரந்தர வதிவிடத்திற்கான விண்ணப்பம் IRCC மூலம் செயல்படுத்தப்படும் வரை கனடாவில் தங்க வைப்பதற்கான ஒரு வழியாகும்.
புலம்பெயர்ந்தோர் கனடாவில் தங்களின் இறுதிக் குடியேற்றத்திற்குத் தயாராவதற்கு உதவும் ஒரு வழியாக கனடா BOWP-ஐ வழங்குகிறது.