அமெரிக்கா மீதான வரியை குறைக்கும் கனடா: ஏன் இந்த திடீர் மனமாற்றம்?
சில அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைப்பதாக கனடா அறிவித்துள்ளது.
அமெரிக்கா மீதான வரி நீக்கம்
கனடா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பதற்றங்களை குறைக்கும் விதமாக, பில்லயன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கான வரியை குறைப்பதாக கனடா பிரதமர் மார்க் கார்னி வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு இணங்காததை அடுத்து, கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35% வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக, ஆரஞ்சு ஜூஸ் முதல் சலவை இயந்திரம் வரை கிட்டத்தட்ட 30 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு 25% வரியை பிரதமர் மார்க் கார்னி அறிவித்தார்.
இந்நிலையில் தற்போதைய புதிய அறிவிப்பானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் கனேடிய பிரதமர் மார்க் கார்னி இடையிலான தொலைபேசி பேச்சுவார்த்தைக்கு பிறகு வந்துள்ளது.
இருப்பினும் வாகனங்கள், அலுமினியம் மற்றும் எஃகு ஆகிய பொருட்களுக்கான வரிகள் தொடர்வதாக மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
ஏன் இந்த மாற்றம்?
புதிய வரி குறைப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் கார்னி வெளியிட்ட தகவலில், கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு இடையே இந்த மாற்றம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு வழிவகுக்கிறது என தெரிவித்துள்ளது.
வரி குறைப்பு நடவடிக்கையானது, இருநாடுகளுக்கு இடையே இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான சுதந்திரமான வர்த்தகங்களை மீண்டும் நிலைநிறுத்தும் என கார்னி குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய நடைமுறையானது செப்டம்பர் 1ம் திகதி முதல் அமுக்கு வரும் என கார்னி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |