கனடாவில் 4 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் குறைப்பு
கனடாவின் Bank of Canada வங்கி கடந்த 4 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
மார்ச் 2022-இல் பணவீக்கத்தை எதிர்த்து வட்டி விகிதம் 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
அதன்பிறகு முதல்முறையாக புதனக்கிழமை (மே 5) வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளது.
கனடாவின் Bank of Canada வங்கி வட்டி விகிதங்களை 4.75 சதவீதமாகக் குறைத்துள்ளது.
பணவீக்கம் டிசம்பரில் 3.4% ஆக இருந்து ஏப்ரலில் 2.7% ஆக குறைந்ததால் Bank of Canada இந்த முடிவை எடுத்துள்ளது.
இது கனடாவின் பணவியல் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. மேலும் இது வரவிருக்கும் மாதங்களில் கூடுதல் வெட்டுக்களுக்கான கதவைத் திறக்கும் என நம்பப்படுகிறது.
Bloomberg கருத்துக்கணிப்பில் சந்தைகள் மற்றும் பொருளாதார வல்லுனர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டதைப் போல, கவர்னர் டிஃப் மாக்லெம் (Tiff Macklem) தலைமையிலான கொள்கை வகுப்பாளர்கள், புதன்கிழமை ஒரே இரவில் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 4.75% ஆகக் குறைத்துள்ளனர்.
பணவீக்கம் 2% இலக்கை நோக்கிச் செல்லும் என்பதில் அதிக நம்பிக்கை இருப்பதாக டிஃப் கூறியுள்ளார்.
இந்த முன்னேற்றம் தொடர்ந்தால், "வட்டி விகிதத்தில் மேலும் வெட்டுக்களை எதிர்பார்ப்பது நியாயமானது" என்றும் அவர் கூறினார்.
இந்த ஆண்டு மேலும் இரண்டு 25-அடிப்படை-புள்ளி வெட்டுக்கள் மற்றும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மேலும் ஐந்து வெட்டுக்கள் இருக்கக்கூடும் என்று, S&P குளோபல் மார்க்கெட் இன்டலிஜென்ஸில் கனேடிய பொருளாதாரத்தின் இயக்குனர் ஆர்லீன் கிஷ் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |