கனடா தேர்தல் 2024: இந்தியா, சீனா, ரஷ்யா தலையீடு? - உளவுத்துறை அதிர்ச்சி தகவல்
கனடாவின் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் தலையீடு இருக்கக் கூடும் என்று அந்நாட்டின் உளவு அமைப்பு எச்சரித்துள்ளது.
கனடா தேர்தல் 2024
கனடாவில் அடுத்த மாதம் 28 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் இந்தியா, சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் தலையிட வாய்ப்புள்ளதாக கனடா உளவுத்துறை (சிஎஸ்ஐஎஸ்) எச்சரித்துள்ளது.
இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலில் வெளிநாட்டு தலையீடு - சிஎஸ்ஐஎஸ் எச்சரிக்கை
இந்த சூழ்நிலையில், கனடா தேர்தலில் வெளிநாடுகள் தலையிடக்கூடும் என்று சிஎஸ்ஐஎஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.
குறிப்பாக, சீனா செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளதாகவும், கனடாவில் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் ஜனநாயக செயல்பாடுகளில் இந்திய அரசு தலையிட முயற்சி செய்யலாம் என்றும் சிஎஸ்ஐஎஸ் துணை இயக்குநர் வனேசா லாயிட் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா மற்றும் சீனா இதுவரை பதிலளிக்கவில்லை.
கனடா தேர்தல் சவால்கள்
அமெரிக்காவின் வரி விதிப்பு அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை கனடா எதிர்கொண்டுள்ளது.
இந்த நிலையில், அங்கு நடைபெற உள்ள தேர்தல் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |