கனடிய பொது தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளி பெண் அபார வெற்றி! எவ்வளவு வாக்குகள் வாங்கியுள்ளார் தெரியுமா?
கனடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ் வம்சாவளி பெண் அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.
கனடாவில் பொது தேர்தலுக்கான வாக்குப்பதிவு திங்கட்கிழமை தொடங்கியது. ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சிக்கும், கன்சா்வேடிவ் கட்சிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
தற்போதைய நிலவரப்படி ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் லிபரல் ஆட்சி அமைப்பது உறுதி என கனடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில் லிபரல் கட்சி சார்பில் oakville தொகுதியில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். அனிதா பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் முன்னாள் அமைச்சர் ஆவார்.
அனிதாவின் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர், தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். அனிதா ஆனந்த் 14,511 வாக்குகளை பெற்றுள்ளார், இது 45.7 சதவீதம் ஆகும்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் கெரி கொல்போர்ன் 38.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
#Elxn44 - ✅ La candidate libérale et ancienne ministre des Services publics et de l'Approvisionnement Anita Anand est réélue dans la circonscription d’Oakville.#polcan #cdnpoli pic.twitter.com/fgU5iaBTnU
— Radio-Canada Info (@RadioCanadaInfo) September 21, 2021