கனேடிய தூதரகம் ஒன்றில் வெடிவிபத்து: சதிவேலையா?
நைஜீரியா நாட்டிலுள்ள கனேடிய தூதரகத்தில் நிகழ்ந்த வெடிவிபத்தில் இருவர் பலியாகியுள்ள நிலையில், அது விபத்தா சதிவேலையா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இருவர் பலி
நைஜீரியா நாட்டின் தலைநகரான அபுஜாவில் அமைந்துள்ள கனேடிய தூதரகத்தில் நேற்று நிகழ்ந்த வெடிவிபத்தொன்றில், இருவர் பலியாகியுள்ளார்கள், இருவர் காயமடைந்துள்ளார்கள்.
GhanaWeb
2,000 லிற்றர் டீசல் இருந்த ஜெனரேட்டர் ஒன்றில் பராமரிப்புப் பணி மேற்கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றியுள்ளது.
அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெடிவிபத்தில், பராமரிப்புப் பணியாளர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்கள். காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுடைய தீக்காயங்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து கனடாவின் வெளிவிவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்த சம்பவம் சதிவேலையாக இருக்கும் என்பதைவிட, கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்த்தால் அது விபத்தாக இருக்கலாம் என்றே தோன்றுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |