வர்த்தக, பொருளாதார உறவுகளை மேம்படுத்த... இந்தியாவில் இயங்கும் கனேடிய தூதரகம்
இந்தியாவில் தலைநகர் புது டெல்லியில் மட்டுமே தற்போது கனடாவின் தூதரகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. மும்பை உள்ளிட்ட குறிப்பிட்ட நகரங்களில் செயல்பட்டு வந்த துணைத் தூதரகங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.
இந்தியாவில் கனேடிய தூதரகம்
டெல்லியில் செயல்படும் தூதரகமானது இந்தியாவில் உள்ள கனேடிய குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது. மட்டுமின்றி, இந்திய குடிமக்களுக்கு கனடாவில் படிப்பு, வேலை அல்லது குடியேறுவதற்கான விசா மற்றும் அனுமதி வழங்கும் பணிகளையும் செய்கிறது.
மேலும், இந்திய-கனடா உறவுகளை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் கலாச்சார பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் செயல்படுகிறது. மும்பை போன்ற நகரங்களில் செயல்படும் துணைத் தூதரகமானது கனடாவுடனான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
அத்துடன் இந்திய குடிமக்களுக்கு விசா மற்றும் அனுமதி சேவைகளை வழங்கி வருகிறது. மும்பை துணைத் தூதரகம், மேற்கு மற்றும் தெற்கு இந்தியாவில் உள்ள கனேடிய குடிமக்களுக்கும், இந்திய குடிமக்களுக்கும் சேவைகளை வழங்குகிறது.
தூதரகங்கள் பொதுவாக ஒரு நாட்டின் தலைநகரில் அமைந்திருக்கும். தூதர்கள் அந்த நாடுகளின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். ஆனால் விசா செயலாக்கம் மற்றும் குடிமக்கள் உதவி போன்ற சேவைகளுக்கு துணைத் தூதரகங்கள் பல, நாட்டின் முதன்மையான நகரங்களில் செயல்படும்.
கனேடிய அதிகாரிகளின் தங்குமிட வசதிகளிலும், இந்தியப் பயணத்தின் போதும் அவர்களுக்கு உதவுதல். விசாக்கள் மற்றும் கடவுச்சீட்டுகள் பற்றிய சந்தேகங்களுக்கு கனேடிய நாட்டினருக்கு உதவுதல்,
தொலைந்து போனாலோ அல்லது திருட்டு போனாலோ மாற்று கடவுச்சீட்டுகளுக்கு ஏற்பாடு செய்தல், நிதி, வணிகம் மற்றும் வணிக விடயங்கள் தொடர்பான நிகழ்வுகளில் கலந்துகொள்வதன் மூலம் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்துதல்,
அரசாங்க சலுகைகள் பற்றிய தெளிவான தகவல்களை வழங்குதல், பிறப்பு மற்றும் திருமணங்களைப் பதிவு செய்வதை எளிதாக்குதல் மற்றும் கனேடிய மாணவர்கள், மாணவர் கடன்களைப் பெறுவதற்கு உதவுதல் என தூதரக அதிகாரிகளுக்கு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செயல்பாடுகள்
தூதரக உறவுகள்: இந்தியா மற்றும் கனடா இடையே அரசியல் மற்றும் தூதரக உறவுகளை நிர்வகிக்கிறது.
குடிமக்கள் சேவை: கனடா குடிமக்களுக்கு விசா, கடவுச்சீட்டு மற்றும் அவசர உதவிகளை வழங்குகிறது.
வர்த்தகம் மற்றும் முதலீடு: இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
பண்பாட்டு பரிமாற்றம்: கலாச்சார நிகழ்வுகள் மற்றும் பரிமாற்றங்களை ஏற்பாடு செய்து, இரு நாடுகளின் கலாச்சாரப் புரிதலை வளர்க்கிறது.
தூதரகங்களால் வழங்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள்:
பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள், திருமணம் மற்றும் சிவில் கூட்டாண்மை உரிமங்கள், கடவுச்சீட்டு மற்றும் பிற அடையாள ஆவணங்களின் நகல்கள், குழந்தைகளுக்கு கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒப்புதல் அறிக்கைகள்,
சட்ட ஆவணங்கள், சொத்து வாங்குவதற்கான ஆவணங்கள், வரி செலுத்துவதற்கான படிவங்கள், சேமிப்புப் பத்திரங்களின் சான்றிதழ்கள், உயில்கள் மற்றும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள்.
நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது உங்கள் வாக்குரிமையை பயன்படுத்த விரும்பினால் உங்கள் தூதரகம் உங்கள் வாக்கைப் பதிவு செய்வதற்கான வழிகளை உங்களுக்கு வழங்கும்.
மட்டுமின்றி, நீங்கள் வெளிநாட்டவர் வரிக்கு உட்பட்டவராக இருந்தால் - நீங்கள் வசிக்கும் நாடு உங்கள் சொந்த நாட்டோடு இரட்டை வரிவிதிப்பு ஒப்பந்தம் செய்யவில்லை என்றால் , உங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்த ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களிலிருந்து நீங்கள் தொடர்ந்து வருமானம் ஈட்டினால் - உங்கள் சொந்த நாட்டிலேயே உங்கள் வரி வருமானத்தைத் தொடர்ந்து தாக்கல் செய்ய வேண்டியிருக்கலாம்.
இதற்கான உதவிகளை தூதரக அதிகாரிகள் வழங்குவார்கள். மேலும், ஒருவர் வெளிநாட்டில் இருக்கும் போது உள்ளூர் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டால், கைது செய்யப்பட்டிருந்தால் அல்லது சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், உங்கள் தூதரகம் உங்களைப் பார்க்க ஒரு பிரதிநிதியை அனுப்பக்கூடும்.
கடுமையான சூழ்நிலைகளில், நீங்கள் வசிக்கும் நாட்டில் உங்கள் உயிருக்கும் நல்வாழ்வுக்கும் உடனடி ஆபத்தை ஏற்படுத்தும் அவசரநிலை அல்லது பேரழிவு ஏற்படலாம். ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய அளவிலான நிகழ்வு குறித்து உங்கள் தூதரகம் அறிந்திருந்தால், உங்களைப் பாதுகாக்க விரைவாகச் செயல்பட வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |