தீபாவளி வாழ்த்து தெரிவித்ததற்காக கொந்தளிக்கும் கனேடியர்: காட்டமான விமர்சனம்
நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் கோபமடைந்துள்ள கனேடியர் ஒருவர் தீபாவளி குறித்து மோசமான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்!
தீபாவளி வாழ்த்து தெரிவித்ததால் கனேடியர் கோபம்
கனேடிய பொறியாளரான Marty Belangerக்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தீபாவளி வாழ்த்துக் கூறும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.
வெள்ளையரான தனக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கப்பட்டதால் கோபமடைந்த Marty, தீபாவளியையும் இந்தியர்களையும் மோசமான வார்த்தைகளால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Dear @Netflix_CA and other service providers & vendors,
— Martyupnorth®- Unacceptable Fact Checker (@Martyupnorth_2) October 17, 2025
You already know everything about me from all my personal information that you keep collecting. Let me repeat some of it. I'm a middle aged white guy from Alberta, who like war movies, science fiction, and real crime… pic.twitter.com/kypI3S3QYf
அத்துடன், இதுபோல் இனி தனக்கு வாழ்த்து அனுப்புவதை நிறுத்துமாறு நெட்ப்ளிக்ஸையும் பிற சேவை நிறுவனங்களையும் திட்டியுள்ளார் அவர்.
இதற்கிடையில், கனடா பிரதமரான மார்க் கார்னி, வெள்ளிக்கிழமையன்று கிரேட்டர் ரொரன்றோவில் நடைபெற்ற தீபாவளி விழா கொண்டாட்டங்களில் கலந்துகொண்டதுடன், இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.