வரலாற்றில் முதல் முறையாக Copa America அரையிறுதியில் நுழைந்த கனடா
கோபா அமெரிக்கா காலிறுதிப் போட்டியில் வெனிசுலாவை பெனால்டிஷூட் அவுட்டில் வீழ்த்தி கனடா அரையிறுதிக்கு முன்னேறியது.
டெக்ஸாஸில் AT & T மைதானத்தில் நடந்த Copa America 2024 காலிறுதியில் கனடா மற்றும் வெனிசுலா அணிகள் மோதின.
ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கனடா (Canada) அணி வீரர் ஜேக்கப் ஷபல்பெர்க் (Jacob Shaffelburg) அபாரமாக கோல் அடித்தார்.
அதற்கு பதிலடியாக வெனிசுலா (Venezuela) வீரர் சாலமன் ரான்டன் (Salomon Rondon) கோல் அடித்தார். அதன் பின்னர் கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிரா ஆனது.
இதனால் பெனால்டிஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் கனடா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தியது.
இதன்மூலம் கனடா முதல் முறையாக கோபா அமெரிக்காவில் அரையிறுதிக்கு முன்னேறியது. மேலும், 10ஆம் திகதி அர்ஜென்டினாவை சந்திக்கிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |