கனடாவில் புதிய புலம்பெயர்தல் விதிகள் உருவாக்கியுள்ள பிரச்சினைகள்
கனடா பிரதமர், கனடாவுக்கு வரும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுவோரின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் புதிய புலம்பெயர்தல் விதிகள் சில அமுலுக்கு வந்துள்ளன.
ஆனால், இந்த புதிய விதிகளால் பல நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
செப்டம்பர் 26 முதல்...
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் எங்கெங்கு வேலையில்லாத் திண்டாட்ட வீதம் 6 சதவிகிதத்துக்கு அதிகமாக உள்ளதோ, அங்கெல்லாம் வெளிநாட்டவர்களுக்கு பணி அனுமதிகள் வழங்கப்படாது என்று கூறியுள்ளார்.
பருவகால பழங்கள் பறிக்கும் பணி, கட்டுமானம் மற்றும் சுகாதாரத்துறைக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பில், கனேடிய பணி வழங்குவோர் வேலைக்கு எடுக்க அனுமதிக்கப்படும் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கை, 20 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த விதிகள், நேற்று முன்தினம், அதாவது, செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி அமுலுக்கு வந்துள்ளன.
பல நடைமுறைப் பிரச்சினைகள்
ஆனால், புதிய புலம்பெயர்தல் விதிகளால் பல நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகியுள்ளன.
பல உணவங்கள், புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டியதுதான் என்கிறார்கள்.
பல பணிகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், கனடா அரசு குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்தே தீருவது என ஒற்றைக்காலில் நிற்கிறது.
அந்த குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாக இருக்கும் நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்கவும் முடியாது.
அத்துடன், ஒரு வருடத்துக்குதான் பணி அனுமதிகளும் வழங்கப்பட உள்ளது.
ஆக, பணி வழங்குவோர், புதிதாக பணியாளர்களை பணிக்கு எடுத்து, அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் நிலையும் காணப்படுகிறது.
ஆக மொத்தத்தில், அரசின் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாக இருப்பதுடன், பல தொழில்கள் மூடப்படும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |