மகளுக்காக அருவருப்பான வேலையையும் செய்யத் துணிந்த கனேடிய தந்தை
பிள்ளைகளுக்காக பெற்றோர் என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிவார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயம்தான்.
ஆனால், தென்மேற்கு ஒன்ராறியோவின் எசெக்ஸில் வாழும் Jeremy Markham (40), அதை நிஜமாக்கியிருக்கிறார். Markhamஉடைய மூன்று வயது மகள், வின்னிபெகில் உள்ள Blakely என்ற இடத்தில் தன் தாயுடன் வாழ்ந்து வருகிறாள்.
எசெக்சில் இருக்கும் தன் குடும்பத்தின் தேவைகளையும் கவனித்துக்கொண்டு, வின்னிபெகில் இருக்கும் மகளையும் சென்று பார்த்து வருவதற்கு அவரிடம் போதுமான பண வசதி இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாதம் இரு முறை தன் மகளைக் காண்பதற்காக வின்னிபெகிற்கு பயணம் மேற்கொண்டு வருகிறார் Markham.
அதற்காக Markham, நாய்களின் கழிவுகளை அள்ளும் ஒரு வேலையைத் துவங்கியுள்ளார். தற்போது அந்த வேலை நன்றாக போவதால், ஏற்கனவே பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டார் அவர்.
பலர் தங்கள் பிள்ளைகளுக்காக எதையும் செய்வோம் என்று சொல்வார்கள். நான் என் பிள்ளைக்காக தெருக்களில் குப்பை அள்ளவும், கழிவறைகளை சுத்தம் செய்யவும் தயார் என்கிறார் Markham.
ஆனால், தான் செய்யும் செய்யும் வேலை தன் மகளுக்கு தெரியவேண்டும் என அவர் நினைக்கிறார். ஒரு நாள் அவளும் தன் தந்தையின் அன்பையும், அவர் தனக்காக எதுவும் செய்வார் என்பதையும் நிச்சயம் புரிந்துகொள்ளுவாள்.