இவ்வளவு கனடியர்களை இதற்கு முன் பார்த்ததில்லை: என் கண்களில் கண்ணீர் - கேப்டன் உருக்கம்
Round of 16 சுற்றுக்கு தகுதி பெற்ற பின், நம்ப முடியாத உணர்வாக இருந்ததாக கனடிய அணித்தலைவர் அல்போன்ஸோ டேவிஸ் தெரிவித்தார்.
வரலாற்றில் முதல் முறையாக
தென் ஆப்பிரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதிய FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டி லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்தது. இரு அணிகளுக்கு கடுமையாக மோதியதால் 90 நிமிடங்கள் வரை கோல் விழவில்லை.
கூடுதல் நேரத்தில் (90+2) ஸ்டீபன் இயூஸ்தாகியோ (Stephen Eustaquio) அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இதன்மூலம் கனடா அணி 1-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் FIFA உலகக்கிண்ண வரலாற்றில் முதல் முறையாக கனடா Round of 16 சுற்றுக்கு தகுதி பெற்றது.
அணித்தலைவர் உருக்கம்
வெற்றியை உறுதி செய்யும் இறுதி விசில் ஒலித்த சில நிமிடங்களிலேயே, பயிற்சியாளர் ஜெஸ் மார்ஷ் தனது வீரர்கள் மற்றும் பணியாளர்களை ஒன்றுகூட்டி, அவர்களை வெகுவாக பாராட்டினார்.

அவர் தனது அணியினரிடம், "கனடிய நாயகர்கள்..உங்களால் இந்நாட்டில் இந்த விளையாட்டின் எதிர்காலம் மிக சிறப்பாக அமையப்போகிறது. இந்த நாட்டில் இந்த விளையாட்டு மாறிக்கொண்டிருக்கிறது" என்று கூறினார்.
மேலும், கனடிய அணியின் தலைவர் அல்போன்ஸோ டேவிஸ் (Alphonso Davies) பேசுகையில்,
"இது நம்ப முடியாத ஒரு உணர்வாக இருந்தது; ஏனெனில், கால்பந்து போட்டி ஒன்றில் இவ்வளவு அதிகமான கனடியர்களை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. அது என் கண்களில் கண்ணீரை வரவழைத்தது" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |