இந்தியா செல்லும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த்
கனடாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், அடுத்த வாரம் இந்தியாவிற்கு தனது முதல் உத்தியோகப்பூர்வ பயணமாக செல்கிறார்.
2023-ல் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட பதற்றங்களைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தங்களது தூதரக உறவுகளை மீண்டும் கட்டமைக்க முயற்சி செய்து வருகின்றன.
இந்த பயணத்திற்கு முன்னதாக, செப்டம்பர் 29-ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் ஓரத்தில் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் அனிதா ஆனந்த் சந்தித்து 'நல்ல சந்திப்பு' என குறிப்பிட்டனர்.
இரு நாடுகளும் உயர் தூதர்களை நியமித்தது, உறவுகளை மீட்டெடுக்கும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
2023-ல், அப்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ,காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்குப் பின்னால் இந்தியா இருப்பதாக குற்றம் சாட்டினார்.
இந்தியா அந்த குற்றச்சாட்டை கடுமையாக மறுத்து, அது அரசியல் நோக்கத்துடன் கூறப்பட்டதாகவும், கனடா அரசு காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
2025-ல் இரு நாடுகளும் தங்களது உயர் தூதர்களை மீண்டும் நியமித்துள்ளன. கனடா உயர் தூதராக கிறிஸ்டோபர் கூட்டர். டெல்லியில் பொறுப்பேற்றார், இந்திய உயர் தூதராக தினேஷ் பட்நாயக் ஒட்டாவாவில் பொறுப்பேற்றார்.
கடந்த மாதம் இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் டெல்லியில் சந்தித்து, நம்பிக்கையை மீட்டெடுக்கும் வழிகளை விவாதித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Anita Anand India visit, Canada India relations 2025, Jaishankar Anita Anand meeting, India Canada diplomatic reset