கிறிஸ்துமஸ் தினத்தில் நண்பர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் நண்பர்கள் இருவர் லொட்டரியில் 1 மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளனர்.
வான்கூவரை சேர்ந்த Wai Hing Yuen மற்றும் Tang Mei Deng என்ற இரு நண்பர்கள் இணைந்து லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளனார்.
கடந்த 11ம் திகதி வாங்கப்பட்ட அந்த சீட்டு, சமீபத்தில் 1 மில்லியன் டொலரை பரிசாக வென்றுள்ளது.
கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியான இந்த அறிவிப்பால் நண்பர்கள் இருவரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடியுள்ளனர்.
முதலில் இருவரும் இதை நம்பவில்லை என்றும், ஒன்றுக்கு பலமுறை எண்ணை பரிசோதித்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நண்பர்களுடன் குழுவாக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார் Wai Hing Yuen.
கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் இணைந்து லொட்டரி சீட்டுகளை வாங்குவது வழமையான ஒன்றே என்பது குறிப்பிடத்தக்கது.