ட்ரம்ப் உடனான மோதலைத் தவிர்க்க கனடாவில் ஒன்றுகூடும் தலைவர்கள்: இஸ்ரேலிய தாக்குதல் பாதிக்குமா?
கனடாவில் நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் டொனால்ட் ட்ரம்பின் மோதலைத் தவிர்க்க தலைவர்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
கனடாவில் ஜி-7 மாநாடு
அமெரிக்காவுடன் வெளியுறவுக் கொள்கை மற்றும் வர்த்தகம் தொடர்பாக கனடா பிளவுகளை சந்தித்துள்ளது.
இந்த நிலையில்தான் கனடாவில் ஜி-7 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு நடத்துகின்றனர்.
அமைதி மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துதல், முக்கியமான கனிம விநியோக சங்கிலிகளை உருவாக்குதல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை தனது முன்னுரிமைகள் என்று பிரதமர் மார்க் கார்னி கூறுகிறார்.
மோதல்கள்
ஆனால், அமெரிக்க வரிகள் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைனில் உள்ள மோதல்கள் போன்ற பிரச்சனைகள் பெரிதும் இந்த கூட்டத்தில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் ட்ரம்ப் மோதலைத் தவிர்க்க இந்த ஜி-7 கூட்டம் நடைபெற உள்ளதாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலிய தாக்குதல்கள் ஜி-7 உச்சிமாநாட்டை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து கார்னியின் அலுவலகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |