கனடாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்த 24 வயதான பெண் வழக்கில் வெளியான முக்கிய தகவல்
கனடாவில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் டிரக் மோதி இளம்பெண் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
24 வயதான Dafne Toumbanakis என்ற இளம்பெண் cyclist ஆவார். மிதிவண்டியை அதிக தூரம் ஓட்டி செல்வதில் அலாதி பிரியம் கொண்டவர் ஆவார். Dafne கடந்தாண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள நெடுஞ்சாலையில் மிதிவண்டியில் செல்லும் போது டிரக் வாகனம் மோதியதில் உயிரிழந்தார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை 16 மாதங்களாக நடந்த நிலையில் தற்போது Jason Davis என்ற நபர் மீது அதிகாரபூர்வமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல் துறை விசாரணையைப் பொறுத்த வரையில் வழக்குப்பதிவு ஒப்புதல் ஒரு நேர்மறையான முடிவாகக் கருதப்படுகிறது.
அதே வேளையில், இந்தச் சம்பவத்தில் துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார் என்ற உண்மையை ஒருபோதும் மறந்துவிட மாட்டோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். ச
ம்பவம் நடந்த போது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இருந்ததாகவும், காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அதிகாரிகள் முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.