கனடாவை சேர்ந்த 25 வயது இளம்பெண் தொடர்பாக பொலிசார் வைத்த முக்கிய வேண்டுகோள்! வெளியான புகைப்படம்
கனடாவில் காணாமல் போன இளம்பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளனர்.
அல்பர்டாவை சேர்ந்த அலெக்சாண்ட்ரா பாரிஷ் என்ற 25 வயதான பெண் கடந்த 4ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.
அவர் கடைசியாக Grande Prairieல் காணப்பட்டுள்ளார். 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட அலெக்சாண்ட்ரா 125 பவுண்ட் எடை கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிசார் கூறுகையில், அலெக்சாண்ட்ரா குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம், அவரின் தற்போதைய நிலை குறித்து கவலையாக உள்ளது.
யாருக்காவது அவர் அலெக்சாண்ட்ரா தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களிடம் கூறுமாறு கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Missing: Alexandra (Molly) Parish, 25, #GrandePrairie pic.twitter.com/zKRm58O2SV
— RCMP Alberta (@RCMPAlberta) September 11, 2021