கனடாவில் புலம்பெயர்ந்த 14 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் திருப்பம்! இளைஞன் கைது
கனடாவில் சுட்டு கொல்லப்பட்ட 14 வயது புலம்பெயர்ந்த சிறுமி வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜமைக்காவை சேர்ந்தவர் Taffash Riley (14). இவர் தனது குடும்பத்தாருடன் கடந்த 2012ல் கனடாவுக்கு குடிபெயர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் திகதி இரவு 9 மணியளவில் Mississaugaவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் படிக்கட்டில் நடந்து வந்த போது மர்மமான முறையில் Taffash சுட்டு கொல்லப்பட்டார்.
இது தொடர்பில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதில் தொடர்புடைய 19 வயது இளைஞரான Michael Moncherry-Desir என்பவரை கைது செய்துள்ளனர்.
இதில் புதிய திருப்பமாக Michael-ஐ Taffash மற்றும் அவர் குடும்பத்தார் அனைவருக்கும் தெரியும் என கூறப்பட்ட நிலையில் Michael-ஐ தங்களுக்கு தெரியாது என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
கொலை நடந்ததற்கான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
தொடர் விசாரணைகள் நடைபெற்றும் வருகிறது, விரைவில் மர்மத்தின் முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.