கனடாவில் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்வதை நிறுத்திய 16 வயது இளம்பெண்! பொலிசார் முக்கிய தகவல்
கனடாவில் கடந்த 5ஆம் திகதி முதல் காணாமல் போன 16 வயது டீன் ஏஜ் பெண் தொடர்பில் பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
மனிடோபா பொலிசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், 16 வயதான ஏஞ்சலினா பவுடர்ஹார்ன் என்பவர் கடந்த 5ஆம் திகதி இரவு 10 மணிக்கு வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார்.
இதன்பின்னர் மெசேஜ் மூலம் குடும்பத்தாரை தொடர்பு கொண்டிருந்தார் ஏஞ்சலினா. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து குடும்பத்தாரை அவர் தொடர்பு கொள்ளவில்லை.
ரஷ்யாவின் அடி மடியிலேயே கைவைத்த உக்ரைன்! சக்தி வாய்ந்த ராக்கெட் லாஞ்சரை தட்டிதூக்கிய வீடியோ
5 அடி 5 அங்குலம் உயரம் கொண்ட ஏஞ்சலினா 50 கிலோ எடை கொண்டவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவரின் கண்கள் பழுப்பு நிறத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏஞ்சலினா குறித்து பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் தங்களிடம் கூறுமாறு பொலிசார் கோரிக்கை வைத்துள்ளனர்.