பயங்கரவாத கும்பலாக அறிவிக்கப்பட்ட பிஷ்னோய் கும்பல்: கனடா அரசு அதிரடி
கனேடிய அரசு பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
கனேடிய அரசு அதிரடி
இந்தியாவை மையமாக கொண்ட குற்றவியல் அமைப்பான பிஷ்னோய் கும்பல் கனேடிய அரசால் பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிஷ்னோய் கும்பல் சீக்கிய ஆர்வலர்களை குறிவைத்து கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தியதாக ராயல் கனேடியன் மவுண்டட் பொலிஸ்(RCMP) குற்றம் சாட்டியதை தொடர்ந்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை திங்கட்கிழமை பொதுப் பாதுகாப்பு துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்டார்.
இந்த முக்கிய முடிவு நாட்டின் பாதுகாப்பு, உளவுத்துறை ஆகியவற்றிக்கு உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு, கொலை, தீ வைப்பு, பணம் பறித்தல் மற்றும் அச்சுறுத்தல் ஆகிய செயல்கள் பிஷ்னோய் கும்பலின் முக்கிய செயல்பாடாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சொத்துக்கள் பறிமுதல்
பிஷ்னோய் கும்பல் பயங்கரவாத கும்பலாக அறிவிக்கப்பட்டதன் மூலம், அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்தல், நிதி கணக்குகளை முடக்குதல் ஆகிய நடவடிக்கையை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |