கனடா - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை முறிவு: வரிவிதிப்பு மூலம் பதிலடி கொடுக்க திட்டம்
Canada halts us trade talks: அமெரிக்கா - கனடா இடையே வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவை சந்தித்துள்ளன.
அமெரிக்கா- கனடா பேச்சுவார்த்தை முறிவு
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கனேடிய பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கடுமையான வரி விதிப்பு கெடு முடிவடைவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த முடிவை கனடா அரசு எடுத்துள்ளது.
அமெரிக்காவின் தரப்பில் கடைசி நேரத்தில் மாற்றப்பட்ட சில திருத்தங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்று கனடா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தரப்பில் இருந்து மாற்றப்பட்ட இந்த நிபந்தனைகள் பொருளாதார ரீதியில் சாத்தியமற்றது மற்றும் நியாயமற்றது என்றும் எந்தவொரு ஒப்பந்தத்தின் மீதான நம்பகத்தன்மையையும் இது கேள்விக்குள்ளாக்கும் என்று கனடா பிரதமர் கார்னி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஒப்பந்தத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் மாற்றங்கள் கனடாவின் நோக்கங்களை நிறைவேற்ற முடியாததாக மாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
50% வரி விதிப்பு
அமெரிக்கா - கனடா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடங்கியதை தொடர்ந்து கிட்டத்தட்ட 28 பில்லியன் டொலர் மதிப்பிலான கனேடிய பொருட்கள் மீது 50% வரி விதிப்பை அமெரிக்கா விதித்துள்ளது.
உள்ளூர் வணிகங்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கில் அமெரிக்கா விதித்த வரிகளுக்கு சமமான வரியானது விதிக்கப்பட்டு பதிலடி கொடுக்கப்படும் என்று கனேடிய பிரதமர் மார்க் கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |