கனடா பிரதான சாலையில் கோர விபத்து... பலியான அனைவரும் முதியவர்கள்: மருத்துவமனையில் பலர்
கனடாவின் பிராதான சாலை ஒன்றில் பேருந்துடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இதுவரை 15 பேர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கண்டிராத மிக மோசமான சம்பவம்
தொடர்புடைய பேருந்தானது முதியவர்கள் மற்றும் ஊனமுற்றவர்களை அழைத்துச் செல்லும் பேருந்து என்றே தெரியவந்துள்ளது. அந்த பிராந்தியத்திலேயே இதுவரை கண்டிராத மிக மோசமான சம்பவம் என்றே கூறப்படுகிறது.
Skilled Truckers Canada
இந்த நிலையில் மனிடோபா மாகாணத்தின் பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய விபத்தில் 15 பேர்கள் மரணமடைந்துள்ளதாகவும் 10 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மனிடோபா மாகாணம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கனடாவை உல்லுக்கிய கோர சம்பவம் இதுவெனவும் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த விபத்து தொடர்பில் RCMP அதிகாரிகள் தரப்பு விசாரணையை முன்னெடுத்துள்ளது.
உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை நண்பகல் லொறி ஒன்று முதியவர்களுடன் பயணப்பட்ட பேருந்து ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. வின்னிபெக்கின் மேற்கு 100 மைல்கள் தொலைவில் Carberry பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
பிரதமர் ட்ரூடோ டுவிட்டர் பக்கத்தில் இரங்கல்
இரண்டு வாகனங்களின் சாரதிகளும் காயங்களுடன் உயிர் பிழைத்து தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2018ல் ஹம்போல்ட் பகுதியில் நடந்த கோர விபத்தில் 15 பேர்கள் வரையில் மரணமடைந்திருந்தனர்.
The news from Carberry, Manitoba is incredibly tragic. I’m sending my deepest condolences to those who lost loved ones today, and I’m keeping the injured in my thoughts. I cannot imagine the pain those affected are feeling – but Canadians are here for you.
— Justin Trudeau (@JustinTrudeau) June 15, 2023
அதில் பெரும்பாலானோர் ஹொக்கி வீரர்கள். அது போன்ற ஒரு சூழல் தற்போது உருவாகியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மோதிய வேகத்தில் பேருந்து தீப்பற்றியதாக கூறுகின்றனர்.
மேலும், அந்த லொறியும் மிக மோசமாக சிதைந்துள்ளதாகவும் நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சாரதி ஒருவர் தெரிவிக்கையில், சாலை விபத்துகளை பார்த்துள்ளேன், ஆனால் இதுபோன்ற ஒரு விபத்தை நேரில் பார்த்ததில்லை எனவும் கூறியுள்ளார்.
தொடர்புடைய விபத்து குறித்து பிரதமர் ட்ரூடோ தமது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |