கனடாவில் வீடற்ற நிலையில் எவ்வளவு மக்கள் வாழ்கிறார்கள் தெரியுமா? வெளிவந்த முக்கிய தகவல்கள்
உலகளவில் 150 மில்லியன் மக்கள் வீடில்லாமல் (homeless) வாழ்கிறார்கள்.
வீடில்லாதவர்கள் என்பது சாலையில் வசிப்பது, நண்பர்களின் வீட்டில் வசிப்பது, தற்காலிகமான இடத்தில் வாழ்வது, பாதுகாப்பு இல்லாமல் தனியார் போர்டிங் வீடுகளில் வாழ்வதை குறிக்கும்.
இப்படி கனடாவில் 10000 பேரில் 10 பேர் வீடில்லாமல் வசிக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.
அதன்படி ஒரு இரவில் 25000ல் இருந்து 30000 பேர் கனடாவில் வீடில்லாமல் வாழ்கிறார்கள். இது 2021 ஆண்டின் தரவாகும்.
பல்வேறு காரணங்களால் கனடாவில் மக்கள் வீடற்றவர்களாக இருக்கிறார்கள்.
பொதுவான காரணங்கள் என பார்த்தால், வாடகை கொடுக்க முடியாத இயலாமை (63 சதவீதம்) , மோதல் அல்லது துன்புறுத்தல் பிரச்சினை (36 சதவீதம்), மது அல்லது போதை பயன்பாடு பிரச்சினைகள் (10 சதவீதம்),
மற்ற காரணங்கள் என பார்த்தால் குடியேற்ற பிரச்சினைகள், செலவுகள் அதிகரித்தல் போன்றவைகளும் காரணமாக உள்ளது.