இந்திய கனேடியர்கள் இருவருக்கு கனடா அளித்துள்ள கௌரவம்
கனடாவில், இந்திய கனேடியர்கள் இருவருக்கு கனடா அரசின் உயரிய கௌரவம் ஒன்று வழங்கப்படுள்ளது.
அஜய் அகர்வால் மற்றும் பர்மிந்தர் ரெய்னா என்னும் அந்த இருவருக்கும் Order of Canada என்னும் உயரிய கௌரவம் வழங்கப்பட்டுள்ளதாக கவர்னர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மனிதகுலத்தின் மேம்பாடு தொடர்பிலான ஆய்வில் பங்கேற்று வரும் அந்த இருவருக்கும் கனடாவின் உயரிய கௌரவமான Order of Canada என்னும் விருது வழங்கப்பட்டுள்ளது.
Order of Canada என்னும் இந்த உயரிய விருது, பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தால், 1967ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சமூகத்தை வடிவமைக்கும் சேவை, கற்பனைகளை நிஜமாக்கும் கண்டுபிடிப்புகள், சமுதாயத்தை இணைக்கும் கருணை கொண்டவர்களை கௌரவிப்பதற்காக இந்த உயரிய விருது உருவாக்கப்பட்டது.
ஒரு கல்வி கற்பிப்பவராகவும் தொழிலதிபராகவும் தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைமைத்துவத்துக்காகவும், மாணவர்களுக்கும் தொழில் செய்வோருக்கும் வழிகாட்டியாக விளங்குவதற்காகவும் அகர்வாலுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
ரெய்னாவைப் பொருத்தவரை, கனடாவில் முதுமையடைதல் மற்றும் பொதுமக்களுடைய உடல் நலம் ஆகியவை தொடர்பாக அவர் மேற்கொண்டுள்ள ஆய்வுக்காகவும், முதியோர் நலன் சேவைகளில் தேசிய அளவில் கொள்கை உருவாக்கத்தில் அவர் ஏற்படுத்தியுள்ள தாக்கத்துக்காகவும் அவர் Order of Canada என்னும் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.