மனிதர்கள் 180 வயது வரை உயிர் வாழலாம்! கனேடிய விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்
2100-ஆம் ஆண்டளவில் மனிதர்கள் 180 ஆண்டுகள் வரை வாழலாம் என கனடாவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த நூற்றாண்டின் இறுதியில் மனிதர்கர்ள் 180 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கர்கள் மற்றும் விஞ்ஞானிகள் குழு கூறியுள்ளது. ஆம், நீங்கள் படித்தது சரிதான்.
Daily Mail நாளிதழின் அறிக்கையின்படி, கனடாவின் HEC Montreal-ன் விஞ்ஞானிகள் மனித வாழ்க்கையை 180 ஆண்டுகள் வரை நீட்டிட்டிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.
2100-ம் ஆண்டுக்குள், மிக வயதான நபர் என்ற சாதனையை முறியடிக்க முடியும் என்று உதவிப் பேராசிரியர் லியோ பெல்சைல் (Leo Belzile) தெரிவித்தார்.
தற்போதைய நிலவரப்படி, oldest living person என்ற பெருமை 1997-ஆம் ஆண்டு 122 வயதில் தனது கடைசி மூச்சை விட்ட பிரான்ஸ் நாட்டுப் பெண் ஜீன் கால்மென்ட் (Jeanne Calment) என்பவருக்குச் சொந்தமாக இருக்கிறது.
நீண்ட காலம் வாழும் மனிதர்கள், வயதானவர்கள் என்பதால் அவர்கள் நிறைய வயது தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுவதால், அதிக மருத்துவ செலவு உட்பட பல விளைவுகள் ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, பார்த்துக்கொள்ளும் செலவு, பென்ஷன் மற்றும் இதற்காக சில முதியோர் திட்டங்கள் தேவைப்படும்.
மேலும், பல உடல்நல சிக்கல்கள் உள்ளன, அதற்கான மருத்துவ செலவும் மிக அதிகமாக இருக்கும் என்று பேராசிரியர் எலீன் கிரிம்மின்ஸ் (Eileen Crimmins) கூறினார்.
அவர்கர்ளின் முழங்கால்கள், இடுப்பு, கார்னியா மற்றும் இதய வால்வுகளை மாற்றுவதற்கு ஒரு பெரிய செலவு இருக்கும் என்று எலீன் கூறினார்.
எலீனின் கூற்றுப்படி, இது பழைய கார் ஓடுவது போல் இருக்கும், ஆனால் அது இறுதியில் இறந்துவிடும்.
ஆயுட்காலம் குறித்த சர்வர்தேச தரவுத்தளம் குறைந்தபட்சம் 110 வயதிற்குட்பட்டவர்கர்ளைக் கண்காணிக்கிறது.
தரவுகளின்படி, 50 வயதிலிருந்து இறக்கும் ஆபத்துத் படிப்படியாக அதிகரிக்கிறது, ஆனால் அது 80 வயதில் குறைகிறது மற்றும் 110 வயதிற்குள் நிலையானதாக இருக்கும்.
ஒருவர் 110 வயதை எட்டும்போது, அடுத்த ஆண்டில் அவர் இறக்கும் வாய்ப்பு 50% அதிகரிக்கும் என்று கூறுகிறார்.