கனடாவுக்கு புலம்பெயர்தலில் உங்கள் வயது முக்கிய பங்கு வகிப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா?
கனடாவுக்கு புலம்பெயர்தலில் உங்கள் வயது முக்கிய பங்கு வகிப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா?
பல்வேறு காரணிகள் பொருத்தமாக இருந்தாலும் வயது என்னும் ஒரு விடயத்தால் புலம்பெயர விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.
கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்பதில் வயது என்ன பங்கு வகிக்கிறது?
எக்ஸ்பிரஸ் நுழைவுத் திட்டத்தின் கீழ், CRS என்பது, புள்ளிகள் அடிப்படையில் கனேடிய நிரந்தர குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கும் ஒருவரை தரவரிசைப்படுத்தும் அமைப்பாகும்.
இந்த CRS என்னும் விரிவான தரவரிசைப்படுத்தும் அமைப்பில், குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் பெற்றால் மட்டுமே, விண்ணப்பம் செய்வதற்கான அழைப்பு உங்களுக்கு விடுக்கப்படும்.
CRSஇல் அதிகபட்சம் 1,200 புள்ளிகள். இந்த தரவரிசைப்படுத்தலில் பல காரணிகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அவை, கல்வித்தகுதி, ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழித்திறன், பணி அனுபவம் முதலானவையாகும். தனிநபர்கள் எக்ஸ்பிரஸ் நுழைவுத்திட்டத்தின் வாயிலாக விண்ணப்பிக்கும்போது அவர்களுக்கு அதிக புள்ளிகள் கிடைக்கும்.
ஆனால், இந்த தரவரிசைப்படுத்தலில், வயது மிகப்பெரிய தடையாக உள்ளது. 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புள்ளிகள் கணிசமாக குறைகின்றன. கனடாவின் CRS என்னும் விரிவான தரவரிசைப்படுத்தும் அமைப்பில், 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு புள்ளிகளே கொடுக்கப்படாது.
29 வயது உடைய ஒருவருக்கு வயது அடிப்படையில் அதிகபட்சமாக 110 புள்ளிகள் வழங்கப்படும். 39 வயது என்றால், அவர்களுக்கு 55 புள்ளிகள், 45 வயது என்றால் பூஜ்யம் புள்ளிகள்!
கனடாவில் தற்போது பணியில் இருக்கும் ஒரு பெரிய எண்ணிக்கையிலான கூட்டத்தார், அடுத்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற இருக்கிறார்கள்.
அந்த இடத்தை நிரப்ப, கனடா இளைஞர்களை தேடிக்கொண்டிருக்கும் நிலையில், வயது அதிகம் உள்ளவர்களை விட, இளம் வயதினருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.