கனடாவில் ஏப்ரல் 1 முதல் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு
கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
கனடா, ஏப்ரல் 1, 2025 முதல் கூட்டாட்சி கட்டுப்பாட்டில் உள்ள வங்கி, விமான சேவை, ரயில் நிறுவனங்கள் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை $17.75 ஆக உயர்த்துகிறது.
தற்போதைய ஊதியமாக $17.30-ல் இருந்து 2.4% அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய உயர்வு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மற்றும் வருமான சமநிலையை ஏற்படுத்த உதவுமென கனடாவின் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு அமைச்சர் ஸ்டீவன் மக்கின்னான் (Steven MacKinnon) தெரிவித்துள்ளார்.
வீட்டு செலவுகள் மற்றும் வாழ்க்கை செலவுகளின் உயர்வை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக Employment and Social Development Canada தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு மாகாணத்தில் மாநில குறைந்தபட்ச ஊதியம் கூட்டாட்சித் தொழிலாளர் ஊதியத்தை விட அதிகமாக இருந்தால், அந்த மாநிலத்தின் உயர்ந்த ஊதியத்தை வழங்கவேண்டும் என நியமனம் செய்யப்பட்டுள்ள விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada increasing minimum wage, Canada minimum wage