கனடா இந்தியா மோதல்: புலம்பெயர்தல் பாதிக்கப்படுமா?
கனடாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான மோதல் வலுத்துவருகிறது. இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சொல்ல, இரு நாடுகளும் மற்ற நாட்டின் தூதரை வெளியேற்ற, இரு நாடுகளும் மற்ற நாட்டுக்குச் செல்வது குறித்து எச்சரிக்கை விடுக்க, தற்போது, கனேடியர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிவருகின்றன.
புலம்பெயர்தல் பாதிக்கப்படுமா?
இந்நிலையில், கனடாவுக்கு புலம்பெயர திட்டமிட்டிருந்த இந்தியர்களுக்கு, இந்தியா கனடா மோதல் காரணமாக புலம்பெயர்தல் பாதிக்கப்படலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா கனடா மோதல் காரணமாக புலம்பெயர்தல் பாதிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள புலம்பெயர்தல் நிபுணர்கள், கனடாவுக்கு தனது பொருளாதாரத்தை வலுப்படுத்த புலம்பெயர் பணியாளர்களை வரவேற்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்.
என்றாலும், தற்காலிகமாக புலம்பெயர்தலுக்கு சில தடைகள் உருவாகலாம் என்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |