இந்தியாவிற்கு 2.8 பில்லியன் டொலர் யூரேனியம் வழங்க கனடா ஒப்பந்தம்
இந்திய அணு நிலையங்களுக்கு கனடா 2.8 பில்லியன் மதிப்பிலான யூரேனியம் வழங்கவுள்ளது.
இந்தியா மற்றும் கனடா இடையே, அணு மின் நிலையங்களுக்கு 2.8 பில்லியன் டொலர் மதிப்பிலான யூரேனியம் வழங்கும் நீண்டகால ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளுக்கிடையிலான Comprehensive Economic Partnership Agreement (CEPA) பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு முன்னேற்றம் கண்டுள்ளது.
கடந்த வாரம் ஜொஹான்ஸ்பர்கில் நடைபெற்ற G20 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னி சந்தித்து, இரு நாடுகளின் civil nuclear cooperation உறவை வலுப்படுத்தியுள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, கனடாவின் Saskatchewan மாநிலத்தில் அமைந்த Cameco Inc நிறுவனம், இந்திய அணு மின் நிலையங்களுக்கு யூரேனியம் வழங்கும்.
Cameco, 2015-ல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து 2020 வரை யூரேனியம் வழங்கியது. அந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், புதிய ஒப்பந்தம் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு யூரேனியம் வழங்குவதற்கான அனுமதி, 2013-ல் அமலுக்கு வந்த Canada-India Nuclear Cooperation Agreement மூலம் கிடைத்தது. தற்போது, இந்தியா சிறிய modular reactors தொடர்பிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
மேலும், இந்த ஒப்பந்தம், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership உடன் இணைந்து, சுத்தமான எரிசக்தி, emerging technologies, AI போன்ற துறைகளில் மூன்று நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும்.
இந்த 2.8 பில்லியன் டொலர் யூரேனியம் ஒப்பந்தம், இந்தியாவின் அணு மின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், சுத்தமான எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தவும் முக்கிய பங்காற்றும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada India 2.8 Bn Dollars uranium deal, Cameco uranium supply to India, Canada India nuclear cooperation 2025, Modi Carney uranium agreement, Canada India CEPA negotiations, India nuclear power uranium imports, Saskatchewan Cameco uranium contract, Canada India clean energy partnership, ACITI partnership India Canada Australia, India modular nuclear reactors interest