கடன் வாங்கி கனடாவுக்கு கனவுகளுடன் சென்ற இந்திய இளைஞர்! 2வது நாளே மாரடைப்பால் இறந்த சோகம்
இந்திய இளைஞர் ஒருவர் கனடாவுக்கு சென்ற இரண்டு நாளில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் இறந்த இந்திய இளைஞர்
பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்தவர் ஹராசிஸ் சிங் பிந்தரா (25). இவர் மாணவர் விசாவில் சமீபத்தில் கனடாவின் பிராம்டனுக்கு சென்ற நிலையில் கடந்த 29ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
அதன்படி சிம் கார்டு வாங்குவதற்கு கடைக்க்கு சென்ற போது மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹாராசிஸ் உயிரிழந்தார்.
tribuneindia
உடலை சொந்த நாட்டிற்கு கொண்டு வர...
ஹராசிஸ் சிங் தாத்தா தேஜிந்தர் சிங் கூறுகையில், ஹராசிஸ் தந்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் உயிரிழந்துவிட்டார். அவரின் தாயார் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். குடும்பத்தார் கடன் வாங்கி தான் ஹாராசிஸை கனடாவுக்கு அனுப்பினார்கள், அவரின் உடலை இந்தியா கொண்டு வர அரசு உதவ வேண்டும் என கோரியுள்ளார்.
இது குறித்து பஞ்சாப்பை சேர்ந்த அரசு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், குடும்பத்தாருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்போம். மனிதாபிமான அடிப்படையில் அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய தேவையான வழிகாட்டுதல்களை அரசாங்கம் வழங்கியுள்ளது.
அரசாங்கம் ஏற்கனவே கனேடிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் சாத்தியமான உடலை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.