ஐரோப்பிய விண்வெளி அமைப்பில் பெரும் முதலீடு செய்துள்ள கனடா
கனேடிய அரசு, ஐரோப்பிய விண்வெளி அமைப்பில் (ESA) தனது பங்குகளை பெரிதும் உயர்த்தியுள்ளது.
528.5 மில்லியன் கனேடிய டொலர் (சுமார் 326.3 மில்லியன் யூரோ) கூடுதல் முதலீடு செய்வதாக கனடிய விண்வெளி நிறுவனம் (CSA) அறிவித்துள்ளது. இது, முந்தைய பங்களிப்புகளை விட பத்து மடங்கு அதிகம்.
இந்த முதலீடு, கனடாவின் வணிக, பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பங்களை மேம்படுத்த உதவும்.
“இன்றைய உலகம் மிகவும் சிக்கலானதும் ஆபத்தானதும் ஆகிறது. அதனால், நம்பகமான கூட்டாளிகளுடன் புதிய அணுகுமுறைகளை உருவாக்க வேண்டும்” என கனேடிய விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி அமைப்புடன் நீண்டகால ஒத்துழைப்பின் மூலம், கனடிய நிறுவனங்களுக்கு ஐரோப்பிய விண்வெளி சந்தையில் சிறப்பு அணுகல் கிடைக்கிறது.
ESA ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு டொலரும், 3 மடங்கு கூடுதல் விற்பனையை உருவாக்குகிறது. இதனால், கனடாவின் பொருளாதாரத்திற்கு பெரும் மதிப்பு சேர்க்கப்படுகிறது.
இது கனடாவின் விண்வெளித் துறையை உலகளவில் முன்னேற்றும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும், தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் வரலாற்றுச் முதலீடு என கனேடிய தொழில்துறை அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்.
ESA-வின் geographical distribution principle அடிப்படையில், முதலீட்டின் அளவுக்கேற்ப கனடிய நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்படும். இதனால், புதுமை, வேலைவாய்ப்பு, ஏற்றுமதி ஆகியவை அதிகரிக்கும்.
2023-ஆம் ஆண்டில், கனடாவின் விண்வெளி துறை 5.1 பில்லியன் டொலர் வருவாய், 3.4 பில்லியன் டொலர் GDP பங்களிப்பு மற்றும் 14,000 உயர்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய முதலீடு, கனடாவை உலக விண்வெளி மேடையில் நம்பகமான மற்றும் முன்னோடியான கூட்டாளியாக நிலைநிறுத்துகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Canada ESA investment 2025, Canadian Space Agency funding, 528 million dollars ESA programs, Canada European space partnership, Canada space technology exports, ESA contracts Canadian companies, Canada defence and space research, Canada Ministerial Council ESA, Canada space sector GDP jobs, Canada global space collaboration