கனடாவில் ஒரு குடும்பத்தையே கொலை செய்த நபர் மேல்முறையீடு: சட்டத்தரணி அளித்துள்ள விளக்கம்

Canada Murder
By Balamanuvelan Jun 09, 2025 07:16 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடாவில், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த இஸ்லாமிய குடும்பத்தின்மீது வேண்டுமென்றே வேனை மோதிக் கொன்ற நபர், தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

ஒரு முழுக் குடும்பத்தையும் கொலை செய்த நபர்

2022ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 6ஆம் திகதி, கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில், சல்மான் அஃப்சால் (46), அவரது மனைவி மதிகா சல்மான் (44), தம்பதியரின் மகள் யும்னா சல்மான் (15), மகன் ஃபயெஸ் அஃப்சால் (9), மற்றும் அஃப்சாலின் தாயார் ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். 

கனடாவில் ஒரு குடும்பத்தையே கொலை செய்த நபர் மேல்முறையீடு: சட்டத்தரணி அளித்துள்ள விளக்கம் | Canada Islam Family Murder Victim Goes To Appeal

கனடா பூங்காவில் கத்திக்குத்து: இருவர் கைது, ஒருவருக்குத் தேடல் தீவிரம்!

கனடா பூங்காவில் கத்திக்குத்து: இருவர் கைது, ஒருவருக்குத் தேடல் தீவிரம்!

அப்போது, நத்தானியேல் (Nathaniel Veltman, 20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக்கொண்டு அவர்கள் மீது மோதினார்.

வேன் மோதியதில், சல்மான் அஃப்சால், அவரது மனைவி மதிகா, மகள் யும்னா, மற்றும், 74 வயதாகும் அஃப்சாலின் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர். தம்பதியரின் மகன் ஃபயெஸ், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சம்பந்தப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்பதால், அவர்கள் மீதான வெறுப்பு காரணமாக நத்தானியேல் வேனைக்கொண்டு வேண்டுமென்றே அவர்கள் மீது மோதியதாக பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.

மேல்முறையீடு செய்யும் குற்றவாளி

இந்த வழக்கில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது நத்தானியேல் தனக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். 

கனடாவில் ஒரு குடும்பத்தையே கொலை செய்த நபர் மேல்முறையீடு: சட்டத்தரணி அளித்துள்ள விளக்கம் | Canada Islam Family Murder Victim Goes To Appeal

இது குறித்து ஊடகவியலாளர்களிடம் விளக்கிய நத்தானியேலின் சட்டத்தரணியான ஸ்டீபன் (Stephen Whitzman), இந்த குற்றத்தால் பாதிக்கப்பட்ட முடும்பத்தினரும், சம்பந்தப்பட்ட சமுதாயத்தினரும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதை அறிவோம்.

அவர்களுடைய உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில், நத்தானியேலுக்கு மேல்முறையீடு செய்வதற்கு சட்டப்படி உரிமை உள்ளது.

அதற்கு நான் உதவி செய்ய இருக்கிறேன். ஆகவே, இரு தரப்பினரும் அதை புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன் என ஸ்டீபன் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US