புலம்பெயர்ந்த தமிழர்களை கனடா அரசு தேர்வு செய்யவுள்ளது என்றனர்! பெண் சாமியார் கைதான வழக்கில் பகீர் தகவல்
கனடாவுக்கு அனுப்புவதாக கூறி நடந்த மெகா மோசடியில் வெளியான புதிய பகீர் தகவல்கள்.
கைதான பெண் சாமியரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கும் பொலிசார்.
கனடாவில் வேலை வாங்கி தருவதாக கூறி மிகப்பெரிய அளவில் மோசடி செய்த பெண் சாமியாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு பொலிசார் முடிவு செய்துள்ள நிலையில் இதில் தொடர்புள்ள இலங்கை தமிழர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் கடந்த மாதம் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில், இலங்கையை சேர்ந்த சிலர் அறிமுகமாகினர். அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதால், கனடா நாட்டில் ஒரு பெரிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதற்கு 300 புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களை கனடா அரசாங்கம் தேர்வு செய்ய உள்ளது. இந்த பணியில் சேருபவர்களுக்கு கனடா நாட்டின் குடியுரிமையும் வழங்கப்படுகிறது. இதற்காக மாதம் ஊதியமாக ரூ.4 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறினர்.
அதை நம்பி எங்கள் தேவாலயத்திற்கு வரும் 116 பேரும் கனடா நாட்டிற்கு வேலைக்கு செல்ல முடிவு செய்தோம். அதற்கு ஒருவருக்கு ரூ.1 லட்சம் மற்றும் குடும்பத்துடன் செல்லும் நபருக்கு ரூ.2 லட்சம் என மொத்தம் 68 லட்சம் பணத்தை வசூலித்தனர்.
ஆனால் சொன்னபடி யாரையும் கனடாவிற்கு அனுப்பவில்லை. பிறகு பணத்தை பெற்ற அவர்கள் மாயமாகினர். எனவே, எங்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்த இலங்கையை சேர்ந்த 7 பேர் மீதும், ஏஜெண்டாக செயல்பட்ட மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த பெண் சாமியார் நடேஸ்வரி (45) என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.
அந்த புகாரின் குற்றப்பிரிவு பொலிசார் நடேஸ்வரியை கைது செய்தனர்.
பெண் சாமியார் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் புகார்கள் அளித்து வருகின்றனர்.
cicnews