கனடாவில் காலி பணியிடங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரிப்பு!
கனடாவில் 2021-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இதுவரை இல்லாத அளவிற்கு காலி பணியிடங்கள் உயர்ந்துள்ளது.
புதிய புள்ளிவிபர கனடா அறிக்கையின்படி, 2021-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 912,600 வரை வேலை காலியிடங்கள் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோவிட் காரணமாக விதிக்கப்பட்ட பொது சுகாதார கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மத்தியில் கனடாவின் பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதால் இவாறு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின் வளர்ச்சி மற்றும் வேலையின்மை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக அதிக அளவிலான வேலை காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டின் Q3-ல் (349,700) இருந்ததை விட Q3 2021-ல் 62.1 சதவீதம் அதிகமாக, அதாவது 912,600 வேலை காலியிடங்கள் இருப்பதாக Statistics Canada குறிப்பிடுகிறது.
Q3 2019 மற்றும் Q3 2021 க்கு இடையில் 20 முக்கிய தொழில்துறை துறைகளில் 18 துறைகளில் காலியிடங்கள் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, தங்குமிடம் மற்றும் உணவு சேவைகள், சுகாதார பராமரிப்பு மற்றும் சமூக உதவி, கட்டுமானம், சில்லறை வர்த்தகம் மற்றும் உற்பத்தி ஆகிய ஐந்து துறைகள் ஏறக்குறைய 68 சதவீத அதிகரிப்புக்கு காரணமாகின்றன.
மறுபுறம், Omicron மாறுபாடும் மிகவும் பரவலாகி வருவதால், இதன் விளைவாக பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன, இது கனடாவின் வேலைவாய்ப்பு திட்டத்தில் அடுத்தடுத்த புள்ளியியல் பாதிக்கலாம் என கவலையை உண்டாக்குகிறது.