வெளிநாடுகளில் வேலை செய்ய கனடா அறிவித்துள்ள வேலைவாய்ப்பு: ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, தனது வெளிநாட்டு சேவை அலுவலகங்களுக்காக ஆட்களை எடுக்கிறது.
என்ன பணி?
கனடாவின் வெளிநாட்டு சேவை அலுவலகங்களில் இருக்கும் காலியிடங்களை நிரப்ப ஆட்களைத் தேடுகிறது கனடா. தகுதியுடையோர் தேர்வு செய்யப்படும் நிலையில், அவர்கள் பல்வேறு நாடுகளில் புலம்பெயர்தல் வெளிநாட்டு சேவை அலுவலர்களாக (Migration Foreign Service Officers) பணிக்கமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்
இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள், 2023, ஜூன் மாதம் 30ஆம் திகதி ஆகும்.
Are you looking for a career where the world could be your workplace?
— GC Jobs (@jobs_gc) March 15, 2023
You're in luck. @CitImmCanada is hiring Foreign Service Officers!
Learn more about this opportunity and apply by June 30.https://t.co/HbboaiCtjR pic.twitter.com/ZMKMBIlqm9
விண்ணப்பிப்பதற்கான தகுதிநிலை என்ன?
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் (bachelor's degree) இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அதேநேரத்தில் பிரெஞ்சு மொழி தெரியாதவர்கள் கவலைப்படவேண்டாம்., அவர்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டால், அவர்களுக்கு மொழிப்பயிற்சியும் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் மொழி ஒன்று தெரிந்திருப்பதுடன், அனுபவமும் இருந்தால் இன்னமும் நல்லது. ஆனால், அது கட்டாயமல்ல!
ஊதியம் எவ்வளவு?
இந்த பணிக்கான ஊதியம், ஆண்டுக்கு 72,292 முதல் 91,472 டொலர்கள் வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலதிக தகவல்களுக்கு...