கனடாவை சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு: இந்தியா நடவடிக்கை
இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை செய்த கனடாவை சேர்ந்த காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லாண்டா பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக குற்றச் செயல்கள்
இந்தியாவின் பஞ்சாப் பகுதியை சேர்ந்தவர் காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லாண்டா(33), இவர் தற்போது கனடாவில் வசித்து வருகிறார்.
லக்பீர் சிங் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருபவர் என்று கூறப்படுகிறது.
2021ம் ஆண்டு மொகாலியில் உள்ள பஞ்சாப் பொலிஸ் உளவுத்துறை அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டவர் லக்பீர் சிங் என கூறப்படுகிறது.
அதே சமயம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் டார்ன் டரனில் சர்ஹாலி பொலிஸ் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் லக்பீர் சிங்கிற்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதியாக அறிவிப்பு
அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் கனடாவை சேர்ந்த லக்பீர் சிங் லாண்டாவிற்கு நெருக்கமானவர்களின் 48 இடங்களில் பஞ்சாப் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் முடிவில் பலர் கைது செய்யப்பட்டனர், அத்துடன் லக்பீர் சிங் வியாபாரி ஒருவரிடம் ஹரிகே என்ற பெயரில் ரூபாய் 15 லட்சம் வரை மிரட்டி ஏமாற்றியது தெரியவந்தது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டுள்ள லக்பீர் சிங் லாண்டா-வை பயங்கரவாதியாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |