கனடாவில் ஒரு கத்திக்குத்து சம்பவம்: 7 பேர் காயம், தாக்குதல்தாரி உட்பட இருவர் பலி
கனடாவில், தன் சொந்த தங்கை உட்பட 7 பேரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார் ஒருவர்.
7 பேரை கத்தியால் குத்திய நபர்
கனடாவின் வின்னிபெகிலுள்ள Hollow Water First Nation என்னும் பூர்வக்குடியினர் வாழும் பகுதியில், நேற்று அதிகாலை Tyrone Simard (26) என்னும் நபர் தன் சொந்த தங்கை உட்பட சிலரைக் கத்தியால் குத்தியுள்ளார்.
அவர் கத்தியால் குத்தியதில், 18 வயது பெண்ணான அவரது தங்கை உயிரிழந்துவிட்டார். ஏழு பேர் காயமடைந்துள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பியோடிய Tyroneஇன் கார், தகவலறிந்து சம்பவ இடம் நோக்கி வந்துகொண்டிருந்த பொலிசாரின் கார் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
அந்த விபத்தில் Tyrone உயிரிழந்துவிட்டார். விபத்தில் காயமடைந்த பெண் பொலிசார் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலுக்கு என்ன காரணம் என பொலிசார் தெரிவிக்காத நிலையில், இப்போதைக்கு பொதுமக்களுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்று மட்டும் கூறியுள்ளார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |