இந்தியாவிலிருந்து கனடா வரும் பயணிகளுக்கு பல கட்டுப்பாடுகள்! புதிய பயண விதிகள் அறிமுகம்: முக்கிய அறிவிப்பு
இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் விமானங்கள் மீதான தடையை கனடா நீக்கியுள்ளது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21), ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாகம் இந்தியாவிலிருந்து வரும் அனைத்து நேரடி வணிக மற்றும் தனியார் பயணிகள் விமானங்கள் மீதான தடையை செப்டம்பர் 26 (ஞாயிற்றுக்கிழமை) வரை நீட்டித்தது.
தற்ப்போது, தடை முடிவுக்கு வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான முழுமையான தடுப்பூசி போட்டதுஉட்பட சில கட்டுப்பாடுகளுடன் அனைத்து இந்தியப் பயணிகளும் கனடாவுக்கு பயணிக்கலாம்.
செப்டம்பர் 27ம் திகதி முதல் இந்தியாவிலிருந்து வரும் விமானங்கள் கனடாவில் தரையிறங்க அனுமதிக்கப்படும் என கனடா போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான பல கட்டுப்பாடுகள் அடங்கிய புதிய பயண விதிகளை கனடா போக்குவரத்துறை பட்டியலிட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து நேரடி விமானத்தில் பயணக்கவிருக்கும் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு 18 மணி நேரத்திற்குள் டெல்லி விமான நிலையத்தில் அங்கீகரிக்கப்பட்ட Genestrings ஆய்வகத்தில், தொற்று பாதிப்பு இல்லை என COVID molecular சோதனை மேற்கொண்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து பயணிகளும் தங்கள் தடுப்பூசி தகவலை ArriveCAN மொபைல் செயலி அல்லது இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, விமான நிறுவனங்கள் பயணிகளின் கொரோனா சோதனை முடிவுகளைச் சரிபார்த்து அவர்கள் கனடாவுக்கு வரத் தகுதியுள்ளவர்களா என்பதை உறுதிசெய்து கொள்வார்கள்.
#ICYMI: Beginning at 00:01 EDT on September 27, direct flights from India can land in Canada with additional public health measures in place. (1/2)
— Transport Canada (@Transport_gc) September 25, 2021
நேரடி விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட்ட பிறகு,
3வது நாடு வழியாக இந்தியாவிலிருந்து கனடாவிற்கு புறப்பட்ட
தகுதியுள்ள பயணிகள்,
இந்தியாவிலிருந்து புறப்பட்ட 72 மணி நேரத்திற்குள், 3வது நாட்டிலிருந்து கனடாவுக்கான பயணத்தைத் தொடர்வதற்கு முன், இந்தியாவைத் தவிர-மூன்றாவது நாட்டிலிருந்து செல்லுபடியாகும் கொரோனா தொற்று இல்லை என்ற COVID molecular சோதனை மேற்கொண்டதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கனடா போக்குவரத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.