பிஷ்னோய் கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது கனடா அரசு
கனடா அரசு பிஷ்னோய கும்பலை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது.
செப்டம்பர் 29-ஆம் திகதி, கனடா அரசு இந்தியாவை மையமாகக் கொண்ட பிஷ்னோய் கும்பலை அதிகாரபூர்வமாக பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.
இந்த கும்பல், குறிப்பிட்ட சமூகங்களை இலக்காகக் கொண்டு பயம் மற்றும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி வெளியிட்ட அறிக்கையில், "பிஷ்னோய் கும்பல் கொலை, துப்பாக்கிச்சூடு, தீவைத்தல் மற்றும் மிரட்டல் மூலம் சமூகங்களில் பாதுகாப்பு குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
இக்குழுவை பட்டியலிடுவதால், அவர்களின் சொத்துக்கள், வாகனங்கள், பணம் ஆகியவற்றை முடக்குவதற்கும், பயங்கரவாத நிதியியல், பயணம் மற்றும் ஆட்கள் சேர்க்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் கிடைக்கும்" என கூறியுள்ளார்.
பிஷ்னோய் கும்பலின் தலைவர் லாரன்ஸ் பிஷ்னோய் இந்திய சிறையில் உள்ளார்.
ஆனால் கனடாவில் உள்ள இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இக்குழு செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
இக்குழு பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், கனடாவின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அவர்களின் செயல்களை கட்டுப்படுத்த உதவியாக அமையும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |