கனடாவில் கரை ஒதுங்கிய சடலத்தின் போக்கெட்டில் இருந்த அந்த பொருள்! மீண்டும் விசாரணையை கையில் எடுத்த பொலிஸ்
கனடாவில் பரிசு விழுந்த லொட்டரி சீட்டுடன் பிணமாக கரை ஒதுங்கிய நபரின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஹுரான் கவுண்டியின் கரையில் நடந்தது. செப்டம்பர் 24, வெள்ளிக்கிழமை ஒரு ஆணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அது அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்த 57 வயதான கிரிகோரி ஜார்விஸ் (Gregory Jarvis) என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.
சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில், நீரில் மூழ்கியதால் மரணம் என்று முடிவு செய்யப்பட்டது. அதனால், ஜார்விஸ் தனது படகில் சமநிலையை இழந்து, தற்செயலாக மண்டையில் மோதி தண்ணீரில் விழுந்ததாக பொலிஸார் நம்பினார்.
Photo Credit: Facebook
அனால், சமீபத்தில் அந்த மனிதனின் உடையில் இருந்த போக்கெட்டில் ஒரு "தி ஜாக்" என்ற லொட்டரி சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, அந்த லொட்டரி எண்ணிற்கு 45,000 டொலர் பரிசு விழுந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக எந்த முறைகேடும் நடந்ததாக சந்தேகிக்கப்படவில்லை என்றாலும், சமீபத்தில் லாட்டரி சீட்டு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் திறக்கவுள்ளதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், லொட்டரியில் அவர் வென்ற பரிசுத்தொகை இறந்தவரின் உறவினர்களுக்கு வழங்கப்படும் என உள்ளூர் அதிகாரிகளின் கூறியுள்ளனர்.