கனடாவில் கோடிக்கணக்கான பணத்தை குப்பை தொட்டிக்கு அனுப்பிய 2 குழந்தைகளின் தந்தை! புகைப்படம்
கனடா லொட்டரியில் பல கோடி பரிசு விழுந்ததாக வந்த இமெயிலை ஏமாற்று வேலை என நினைத்து அழித்து virtual trash binக்கு நபர் ஒருவர் அனுப்பிய நிலையில் உண்மையிலேயே அவருக்கு பரிசு விழுந்தது பின்னர் தெரியவந்துள்ளது.
லொட்டரி பரிசு விழுந்ததாக வந்த இ மெயில்
ரிச்மண்ட் ஹில்லை சேர்ந்தவர் பின் பின் லுயூ (40). இவருக்கு சமீபத்தில் வந்த இமெயிலில் லொட்டோ மேக்ஸ் லொட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.
யாரோ தன்னை ஏமாற்றுவதாக நினைத்த லுயூ அந்த மெயிலை virtual trash bin எனப்படும் மெய்நிகர் குப்பை தொட்டிக்கு அனுப்பினார். பின்னர் மீண்டும் அவருக்கு அதே போன்ற மெயில் வந்த நிலையில் தனது கணக்கை லாக் இன் செய்து பார்த்த போது லொட்டரியில் உண்மையிலேயே $1 மில்லியன் பரிசு விழுந்தது தெரியவந்தது.
OLG
பரிசு பணத்தை வைத்து
இதையடுத்து கோடிக்கணக்கான பணத்தை குப்பை தொட்டியில் போட்டது போன்ற ஒரு செய்துவிட்டோமே என நினைத்து கொண்டார். இந்த தகவலை இரண்டு குழந்தைகளின் தந்தையான லுயூ தனது மனைவியிடம் சொன்ன போது அவர்கள் நம்பவில்லை.
பிறகு தான் நம்பியிருக்கிறார்.
பரிசு பணத்தில் பெரிய பகுதி குழந்தைகளின் கல்விக்கு செலவிடப்படும் என கூறியுள்ள லுயூ குடும்பத்தாருக்கு பெரிய விருந்துடன் இந்த அதிர்ஷ்டத்தை கொண்டாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.