காட்டுத்தீ பற்றியெரியும் நிலையில் சர்ச்சைக்குரிய செயலை செய்யும்போது கையும் களவுமாக சிக்கிய கனேடியர்
கனடாவின் பல பகுதிகளில் காட்டுத்தீ பற்றி, அதனால் பல்வேறு பாதிப்புகளையும் இழப்புகளையும் கனேடிய நகரங்கள் பல சந்தித்துவரும் நிலையில், சர்ச்சைக்குரிய செயலைச் செய்த கனேடியர் ஒருவர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.
மேற்கு Kelownaவில் மலைப்பகுதி ஒன்றில் அடர்த்தியான புதர் ஒன்றில் திடீரென தீப்பற்றியதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த தீயை தாங்களே அணைத்துள்ளனர்.
பிறகு அவர்கள் பொலிசாரை அழைத்து, தீ வைத்த நபரை பார்த்ததாக தாங்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் தீவைக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து அவர்கள் பொலிசாரிடமும் தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கும் அளித்துள்ளனர்.
அந்த நபரையும் அவரது வாகனத்தையும் தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்த மக்கள் கொடுத்த தகவலின்பேரில் Stephen Leader (36) என்ற நபர் கைது செய்யப்பட்டு காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது, வேண்டுமென்றே தீவைத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.