கனடாவில் சாலையை கடந்த போது பல மீட்டருக்கு தூக்கி வீசப்பட்ட 17 வயது இளம்பெண் பலி! குற்றவாளிக்கு தண்டனை அறிவிப்பு
கனடாவில் 17 வயது சிறுமி மீது கார் ஏற்றி கொன்ற வழக்கில் குற்றவாளிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
North Yorkல் கடந்தாண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி காலையில் ஒலிவியா (17) மற்றும் அவர் சகோதரி ஜூலியா ஆகியோர் அங்குள்ள சாலையை கடக்க முயன்ற போது காரில் வேகமாக வந்த ஷான் ராம்சே அவர்கள் மீது மோதினார்.
இதில் ஜூலியா குறைந்த தூரத்தில் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஒலிவியா பல மீட்டர்கள் தள்ளி தூக்கி வீசப்பட்டார். பின்னர் காரை ஒலிவியா மீது ஏற்றியபடி அங்கிருந்து வேகமாக தப்பி சென்றிருக்கிறார் ராம்சே.
இந்த சம்பவத்தில் ஒலிவியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஜூலியா காயமடைந்தார். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து ராம்சே தானே பொலிசில் வந்து சரணடைந்தார்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி ராம்சேவுக்கு இரண்டாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு ஏழு வருடங்கள் வாகனங்கள் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தண்டனையை அறிவிப்பதற்கு முன்னர் தன்னால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் குடும்பத்தாரிடம் ராம்சே மன்னிப்பு கேட்டுள்ளார்.