FIFA உலகக்கிண்ணத்தில் கனடா கோல்மழை! கோனேயின் கால் எலும்பு முறிவு..அனல் பறந்த ஆட்டம்
FIFA 2026 கால்பந்து போட்டியில் கனடா அணி 6-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தியது.
ஜோனதன் டேவிட் மிரட்டல்
கனடா மற்றும் கத்தார் அணிகள் மோதிய உலகக்கிண்ண கால்பந்து போட்டி வான்கூவரில் நடந்தது.

ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் கனடாவின் சைல் லாரின் கோல் அடித்தார்.
அதனைத் தொடர்ந்து, அதே அணியின் ஜோனதன் டேவிட் 29 மற்றும் 45+3வது நிமிடங்களில் கோல்கள் அடித்தார்.
இரண்டாம் பாதியின் 64வது நிமிடத்தில் நேதன் சலிபா (கனடா) கோல் அடிக்க, 75வது நிமிடத்தில் கத்தார் வீரர் மொகம்மது மானையின் கோல் தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதனால் அது சுயகோலாக மாற, கனடா அணிக்கு 5வது கோல் கிடைத்தது.
கனடா வெற்றி
ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் (90+2) ஜோனதன் டேவிட் (Jonathan David) கோல் அடிக்க, கனடா அணி 6-0 என்ற அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் கத்தார் வீரர் அஸ்ஸிம் மாடிபோ, கனடா வீரர் இஸ்மாயில் கோனேவின் காலினை இடறிவிட (Ismail Kone) அவருக்கு கால்முறிவு ஏற்பட்டது.
கத்தாரின் ஹோமம் அகமது (33வது நிமிடம்), அஸ்ஸிம் மாடிபோ (53வது நிமிடம்) ஆகியோருக்கு சிவப்பு அட்டை கொடுக்கப்பட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |