புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கி: 10 உறுப்பு நாடுகளை அறிவிக்கும் கனடா
புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கியை தொடங்குவது தொடர்பான திட்டத்தை அறிவிக்க கனடா தயாராகி வருகிறது.
புதிய கூட்டமைப்பு
புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கியின் (DSRB- Defence, Security and Resilience Bank) சுமார் 10 நிறுவன நாடுகளை அடுத்த வாரம் துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டில் அறிவிக்க கனடா திட்டமிட்டுள்ளது.
கனடாவின் தலைமையின் கீழ் அமையும் இந்த DSRB திட்டம், நடுத்தர நாடுகளின் பாதுகாப்பு வலிமையை கூட்டுவதோடு அதன் உறுப்பு நாடுகளுக்கான நிதி கிடைப்பதை உறுதி செய்வது ஆகும்.

அமெரிக்காவின் தலைமையிலான கூட்டமைப்பு பிளவு பட்டு வருவது மற்றும் மாறி வரும் அடுத்தடுத்த உலகளாவிய சூழ்நிலை ஆகியவற்றை எதிர் கொள்வதற்கான முக்கிய உத்தியாக கனடா இதனை முன்னெடுத்து உள்ளது.
புதிய உலகளாவிய பாதுகாப்பு வங்கியின் நோக்கத்தை நிறைவேற்ற $133 பில்லியன் அமெரிக்க டொலர் வரை திரட்ட DSRB திட்டமிட்டுள்ளது.
இதற்கான உறுப்பு நாடுகளை இறுதி செய்வதற்கான கடைசி காலக்கெடுவாக துருக்கியில் நடைபெறும் நேட்டோ உச்சி மாநாட்டை கனடா அரசு நிர்ணயித்து இருப்பதாக கனடாவின் வணிக மேம்பாட்டு வங்கியின் CEO இசபெல் ஹூடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடக்கத்தில் இந்த DSRB திட்டத்தில் கனடாவை தவிர, ஐரோப்பிய நாடுகள் மட்டுமே உறுப்பினராக இருக்கும் என்று எதிர்பார்க்க முடிகிறது.
இது நல்ல திட்டமாக கருதினாலும், உறுப்பு நாடுகள் வழங்க வேண்டிய மூலதன உறுதிமொழி ஆகியவை குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அது நிறைவடைந்த பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று ஹூடன் கருத்து தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |