எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர்
ICE அதிகாரிகள் தனது நகரத்திற்குள் நுழைய வேண்டாம் என காணொளி வெளியிட்டதற்காக ரொறன்ரோ மேயர் கேலிக்கு உள்ளாகியுள்ளார்.
மேயர் ஒலிவியா சோவ்
கனடாவின் ரொறன்ரோ நகரம் ஃபிபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின் 6 போட்டிகளை நடத்துகிறது.

சூன் மற்றும் சூலை மாதங்களில் இப்போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், நகர மேயர் ஒலிவியா சோவ் (Olivia Chow) அமெரிக்க ICE அதிகாரிகளை தனது நகரத்திற்குள் வரவேற்கப் போவதில்லை என்று சமூக ஊடகங்களில் காணொளி வாயிலாக தெரிவித்தார்.
அந்த காணொளியில் அவர், "இந்நகரத்தில் ICE-க்கு இடமில்லை. ஃபிபா உலகக்கிண்ணத் தொடரின் காரணமாக ரொறன்ரோ ஆயிரக்கணக்கான குடும்பங்களை வரவேற்க உள்ளது" என்றார்.
ICE வெளியே இருங்கள்
மேலும், "இங்கு அனைவருக்கும் இடம் உண்டு; அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். எனவே, ICE வெளியே இருங்கள். நீங்கள் இங்கு எங்களுக்குத் தேவையில்லை" என்றார்.
இந்த காணொளியின் மூலம் மேயர் தற்போது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார். அவரது காணொளியை நடிப்பு பலர் விமர்சித்ததுடன், அவர் எந்த நாட்டில் வசிக்கிறார் என்பது அவருக்குத் தெரியுமா என்றும் கேட்டனர். கனடாவில் ICE-யின் செயல்பாடுகள் குறைவாகவே உள்ளன.
அதன் உள்நாட்டுப் பாதுகாப்பு விசாரணைகள் பிரிவு, ரொறன்ரோ, வான்கூவர், கல்கரி, மாண்ட்ரீல் மற்றும் ஒட்டாவாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரங்களில் இருந்து செயல்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |