குப்பை தொட்டியில் உறங்கி இன்று கனடாவின் மிகப்பெரிய கோடீஸ்வரராக உயர்ந்த தமிழர்! யார் இவர்?
சாலையில் படுத்து தூங்கிய தமிழர் ஒருவர் தற்போது கனடாவில் பிரபல கோடீஸ்வரராக மாறியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் Toronto நகரில் வசித்து வருபவர் Shaws Samson(50). கோவையை பூர்வீகமாக கொண்ட இவர், வறுமையின் காரணமாக பேருந்து நிலையத்தில் கூடாரம் ஒன்று அமைத்து குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் வேலை தேடி குடும்பமாக வெளியூர் சென்ற போது Samson தனது பெற்றோரை விட்டு தவறுதலாக பிரிந்துள்ளார். இதனால் எங்கே செல்வது என்று தெரியாததால் தெரு தெருவாக திரிந்து கிடைக்கும் உணவை சாப்பிட்டு குப்பை தொட்டியில் படுத்து உறங்கி நாட்களை கழித்து வந்தார்.
8 வயது சிறுவன் ஒருவன் ஆதரவு இல்லாமல் தவித்து வருவதாக குழந்தை நலத்துறைக்கு புகார் சென்றுள்ளது. அதன் அடிப்படையில் Samson மீட்கப்பட்டு சிறுவர் காப்பகத்தில் ஒப்படைப்பட்டுள்ள நிலையில் 1979ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தம்பதி ஒருவர் அவரை தத்து எடுத்து கொண்டனர்.
அதன்பின்னர் அவருக்கு சமையல் கலை மீது பயங்கர ஆர்வம் வந்துள்ளது. பின்னர் அதனையே தனது தொழிலாக மாற்றி கொண்டு சொந்தமாக ஒரு ஹோட்டலை திறந்தார். இதன் மூலம் அவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து இன்று பிரபல கோடீஸ்வரராக விளங்கி வருகிறார்.
Samson ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தனக்கு நேரத்தின் மீது அதீத நம்பிக்கை இருப்பதாகவும், தான் ரோட்டில் சுற்றித் திரிந்த அந்த காலத்தில் குழந்தைகள் நல அதிகாரிகள் என்னை பார்க்காவிட்டால் தனது வாழ்க்கை இப்படி மாறியிருக்காது என்றி கூறி முகம் தெரியாத அதிகாரிகளுக்கு நன்றியை கூறியுள்ளார்.