கனடாவில் கொரோனாவை தொடர்ந்து பரவும் மர்மமான நோய்! பீதியில் மக்கள்: உயிரிழந்த 7-வது நபர்: கலங்கி நிற்கும் மகள்
கொரோனா வைரஸ் பரவல் உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் நிலையில், கனடாவில் மர்மான மூளை நோய் ஒன்று பரவி வருகிறது.
உலகையே கொரோனா என்னும் கொடிய வைரஸ் ஆட்டிப் படைத்து வருவதால், மற்ற நோய்கள் எல்லாம் பற்றி பேச நேரமில்லை. அந்தளவிற்கு இந்த கொரோனாவால் பல கோடி மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இருப்பினும் தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்பாட்டி வருவதால், இதன் பாதிப்பு இப்போது குறைந்து வருகிறது. இந்நிலையில், கனடாவில் ஒரு மர்மமான மூளை நோய் ஒன்று பரவி மக்களிடையே பீதியை கிளப்பி வருகிறது.
அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள New Brunswick மாகாணத்தில் உள்ள மக்களிடையே அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு மர்மமான மூளை நோய் பரவி பீதியைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
இந்த மூளை நோய் எங்கிருந்து பரவுகிறது என்பது இன்னும் அறியப்படவில்லை. இதனால் இது கனடாவின் பல மருத்துவ நிபுணர்களையும், உயர் நரம்பியல் நிபுணர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த மூளை நோயால் இறந்தவர்கள் எல்லாம் கனவில் வருவதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த மர்மமான மூளை நோயால் 6 பேர் இறந்துள்ளார்கள். இந்த மர்மமான மூளை நோய்க்கான காரணத்தைக் கண்டறிய நரம்பியல் நிபுணர்கள் முயற்சித்து வருகின்றனர்.
சிலர் விஞ்ஞானிகள் செல்போன் டவரில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களால் இந்நோய் பரவுவதாக தெரிவிக்கின்றனர். அதே சமயம், இந்நோய்க்கு கொரோனா தடுப்பூசி தான் என்று சில விஞ்ஞானிகள் இப்போது குற்றம் சாட்டுகிறார்கள்.
ஆனால் இந்த மூளை நோய் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பே கனடாவில் தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இந்த நோய் காரணமாக 48 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில் கூட கொரோனா பரவ ஆரம்பித்ததும், அங்குள்ள சுகாதார துறை அதிகாரிகள் இந்த மூளை நோயை மறந்துவிட்டனர். தற்போது இந்த மூளை நோய் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது.
New Brunswick நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய 77 வயது தாய் மர்மமான நரம்பியல் நோய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டதாகவும், கடந்த டிசம்பர் மாதம் தனது தாயாருக்கு இதன் அறிகுறிகள் தெரிந்ததாகவும், ஆனால் சில மாதங்களில் விரைவில் மோசமடைந்து இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த மர்மான மூளை நோயால் 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமை இந்த நோய் தொடர்பான புதிய மரண அறிவித்தல் தரவுகளில் தன்னுடைய தாயாரின் பெயர் இல்லை என்று இவர் வேதனையில் உள்ளார்.
அவர், இந்த நோயால் இறந்த நபர்களில் ஒருவராக தனது தாயின் மரணம் இன்னும் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கண்கலங்கியுள்ளார்.
6 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய, இந்நோய் குறித்து அறிந்து கொள்வதற்கு நீண்ட காலம் கிடைத்தும், இன்று வரை விஞ்ஞானிகளால் இந்நோயின் பெயரை கண்டறியமுடியவில்லை.
அதோடு இந்நோய் சுற்றுச்சூழலால் பரவுகிறதா? இது மரபணு தானா? அல்லது மீன் அல்லது மான் இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் பரவுகிறதா? இல்லை வேறு எதனால் பரவுகிறது என்ற கேள்வியையும் கேட்டு வருகிறார்கள்.
ஆனால் இந்த எந்த கேள்விக்குமான விடையையும் விஞ்ஞானிகளால் விளக்க முடியவில்லை. இந்த நோய் மூளையை பாதிப்பதால், இது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டுகிறது.
அதில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கமின்மை மற்றும் நினைவாற்றல் செயல்பாடுகள் பலவீனமாக இருப்பதுடன், ஒரு மாய தோற்றத்தையும் அனுபவிப்பதாக புகாரளித்துள்ளனர்.
சிலர் தூக்கத்தில் இறந்தவர்களைக் காண்பதாகவும் கூறுகிறார்கள். இந்த மர்மமான மூளை நோய் குறித்த தகவல்களை மார்ச் மாதத்தில் நியூ பிரன்சுவிக் மாகாணத்தின் தலைமை மருத்துவ அதிகாரி பொது மக்களுக்கு தெரிவித்தார். அவர், அறிவியலில் என்ன தான் அசாதாரண முன்னேற்றத்தைக் கண்ட போதிலும், மன நோய்கள் அல்லது நரம்பியல் தொடர்பான நோய்கள் குறித்த அறிவைப் பொறுத்தவரை நாம் இன்னும் பின்தங்கியிருப்பதாகவும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.