கனடாவில் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளை வாசிக்க முடியாது!
கனேடியர்கள் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் செய்திகளைப் படிக்க முடியாது என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இணையச் செய்திச் சட்டம்
கனேடிய அரசு முன்மொழியப்பட்ட இணையச் செய்திச் சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், கனேடியர்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளைப் படிக்க முடியாதென இவற்றின் தலைமை நிறுவனமான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெட்டா செய்தி தொடர்பாளர் லிசா லாவென்ச்சர் ”கனேடிய அரசின் விதிகள் நிறைவேற்றப்பட்டால் கனேடியர்கள் இனி மெட்டாவின் கீழ் இயங்கும் சமூக வலைத்தளங்களின் மூலம் செய்திகளின் இணைப்பைப் பயன்படுத்தி செய்திகளைப் படிக்க முடியாது” எனக் கூறியுள்ளார்.
@AP PHOTO
மெட்டா மற்றும் கூகுள் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள் கனடா அரசால் முன்மொழியப்பட்ட பில் சி-18 என அழைக்கப்படும் சட்டத்திற்கு எதிராக நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.
அச்சுறுத்தும் மெட்டா
கனடாவின் பெரிய ஊடக நிறுவனங்களும், மத்திய லிபரல் அரசாங்கமும் இந்த மசோதாவை ஆதரித்துள்ளன. இது தொழில் நுட்ப நிறுவனங்கள், ஊடகங்களைக் கையகப்படுத்தும் சூழலை மாற்றும் எனக் கூறியுள்ளனர்.
மெட்டா நிறுவனம் வெளியிட்ட இந்த அறிக்கைக்குப் பின்பு பேசிய பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ் “ மீண்டும் ஒரு முறை, கனேடிய அரசாங்கத்திடம் நல்லெண்ணத்துடன் பணியாற்றுவதற்குப் பதிலாக பேஸ்புக் அச்சுறுத்தல்களை நாடியிருப்பது ஏமாற்றமளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
@Toranto star
நாங்கள் இடுகையிடாத இணைப்புகள் அல்லது செய்திகளுக்குப் பணம் செலுத்த எங்களை கட்டாயப்படுத்தும் ஒரு சட்டமன்ற கட்டமைப்பானது நீதிக்குப் புறம்பானது, எங்கள் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தைப் பொதுமக்கள் எந்த அளவு பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியும் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் " என்று மெட்டா செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.